Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினிகாந்தை ஏன் மற்ற நடிகர்கள் பின்பற்றக் கூடாது? அ‌ன்பும‌ணி கே‌ள்‌வி!

ரஜினிகாந்தை ஏன் மற்ற நடிகர்கள் பின்பற்றக் கூடாது? அ‌ன்பும‌ணி கே‌ள்‌வி!
, ஞாயிறு, 18 மே 2008 (11:03 IST)
புகை பிடிக்காமல் நடித்து தொடர்ந்து 2 வெற்றிப்படங்களை கொடுத்த ரஜினிகாந்தை ஏன் மற்ற நடிகர்கள் பின்பற்றக் கூடாது? என்று மத்திய அமை‌ச்ச‌ர் அன்புமணி கேள்வி விடுத்துள்ளார்.

செ‌ன்னை‌யி‌ல் அவ‌ர் செ‌ய்‌தியாள‌ர்களு‌‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், இந்தியாவில் 14.1 ‌விழு‌க்காடு பள்ளி குழந்தைகள் புகையிலை பயன்படுத்துகிறார்கள். 52 ‌விழு‌க்காடு குழந்தைகள் சினிமா மூலமே புகைப்பழக்கத்துக்கு ஆளாகிறார்கள். 1950-களில் 19 ‌விழு‌க்காடு சினிமாவில் புகை பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றன. அதிலும் குறிப்பாக வில்லன்களே புகை பிடிப்பார்கள்.

2004-ல் 89 ‌விழு‌க்காடு சினிமாவில் புகை பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் கதாநாயகர்களும் புகை பிடிக்கிறார்கள். புகையிலை விளம்பரத்தை விட சினிமாவில் புகைபிடிக்கும் காட்சி அதிக அளவு ஈர்ப்பதாக உள்ளது என்று ஆய்வு அறிக்கை கூறுகிறது.

28 வயதில் ஆரம்பித்த குடிப்பழக்கம், இப்போது 19 வயதிலேயே ஆரம்பமாகி உள்ளது. இன்னும் 5 வருடங்களில் இது 15 வயதாக குறைந்துவிடும். புகை, மது, `ஜங் புட்` (பிட்சா, பர்கர், சிப்ஸ், குளிர்பானங்கள்) ஆகியவைகளால் தான் அதிகமான நோய்கள் வருகின்றன. இதனை ஒரு சுகாதாரத் துறை பார்த்துக் கொண்டு எப்படி அமைதியாக இருக்க முடியும்.

ரஜினிகாந்த் புகை பிடிக்கும் காட்சிகள் இல்லாமல் தொடர்ந்து 2 வெற்றிப்படங்கள் (சந்திரமுகி, சிவாஜி) தரவில்லையா? இதனை ஏன் மற்ற நடிகர்கள் பின்பற்றக் கூடாது? இதனால் நான் நடிகர்களுக்கோ, சினிமாவுக்கோ எதிரானவன் என்று அர்த்தமில்லை. அமிதாப்பச்சனும், ஷாருக்கானும் சுகாதாரத்துறையில் போலியோ திட்டம் போன்றவைகளுக்காக தூதுவர்களாக இருக்கிறார்கள்.

எனது இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்களிடம் இருந்து அதிகமான ஆதரவு கிடைத்துள்ளது. விரைவில் நான் எனது வெப்சைட்டை தொடங்க இருக்கிறேன். அதிலும் விருப்பமுள்ளவர்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் எ‌ன்று அமை‌ச்ச‌ர் அ‌ன்பும‌ணி கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil