தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து அவரது மகளும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழியிடம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விசாரித்தார்.
முதலமைச்சர் கருணாநிதி கழுத்து வலி மற்றும் தலைவலி காரணமாக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியிடம் தொலைபேசியில் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதலமைச்சர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.
அப்போது, முதலமைச்சர் கருணாநிதி சில நாள் ஓய்வுக்கு பிறகு தனது பணிகளை தொடங்குவார் என்று கனிமொழி கூறியதாக அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே முதல்வர் கருணாநிதியை அவரது மகன் மு.க.அழகிரி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, வன்னியர் பேரவை தலைவர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.