Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அறிக்கையை தவறாக எடுத்துக்கொண்டதற்கு வருந்துகிறேன்: வரதராஜனு‌க்கு கருணா‌நி‌தி ப‌தி‌ல்!

Advertiesment
அறிக்கையை தவறாக எடுத்துக்கொண்டதற்கு வருந்துகிறேன்: வரதராஜனு‌க்கு கருணா‌நி‌தி ப‌தி‌ல்!
, வெள்ளி, 16 மே 2008 (13:32 IST)
''கூட இருந்தே குழி பறிப்போரின் தோழமை'' என்று நான் எனது அறிக்கை ஒன்றில் குமுறியிருப்பதை வரதராஜ‌ன் தனது கட்சிக்கும் சேர்த்துத் தவறாக எடுத்துக் கொண்டமைக்காக நான் மிகவும் வருந்துகிறேன் எ‌ன்று முத‌‌‌ல்வ‌ர் கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏடு "தீக்கதிரி''ல் எழுதியுள்ள "மனம் திறந்து ஒரு வாழ்த்து!'' என்ற கட்டுரையைப்படித்தேன்.

"கூட இருந்தே குழி பறிப்போரின் தோழமை'' என்று நான் எனது அறிக்கை ஒன்றில் "குமுறியிருப்பதை''; வரதராஜ‌ன் தனது கட்சிக்கும் சேர்த்துத் தவறாக எடுத்துக் கொண்டமைக்காக நான் மிகவும் வருந்துகிறேன்.

குற்றமுள்ள நெஞ்சுதான் குறுகுறுக்க வேண்டுமே தவிர; விருப்போ வெறுப்போ அதனை வெளிப்படையாகக் கூறி நயம்பட இடித்துரைத்துத்திருத்துகின்ற நிலையில் "கூட்டணி தர்ம''த்தை எல்லா கட்டங்களிலும் கலந்துபேசி கடைப்பிடிக்கிற மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் என் அறிக்கையில் காணும் அந்த வாசகத்திற்குத் தங்களுக்குப் பொருந்தாத பொருளை ஏன் காணவேண்டும் என்பதே என் கவலை!

மற்றபடி; மனம் திறந்து அவர் எழுதியுள்ள என்னைப் பற்றிய வாழ்த்துக் கட்டுரையை (மேற்கண்ட இந்த ஒரு விளக்கத்தைத் தவிர வேறெதுவும் கூறாமல்) வரிக்குவரி அப்படியே ஏற்றுக் கொள்கிறேன் எ‌ன்று முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil