சென்னையில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன் கூறினார்.
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சென்னை மாநகரம் மிகவும் பாதுகாப்பாக உள்ளது. ஜெய்ப்பூரில் நடந்த குண்டுவெடிப்பு நிகழ்வை தொடர்ந்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்துள்ளனர். எனவே, பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.
காவல்துறையினர் தொடர்ந்து சோதனைகளை நடத்தி வருகின்றனர். சந்தேகத்திற்குரிய நபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். தேவைப்பட்டால் அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்படுவார்கள்.
தங்கக் காசு நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்த மக்களுக்கு பணத்தை மீட்டு தருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று நாஞ்சில் குமரன் கூறினார்.