ஈரோடு அரசு மருத்துவமனையில் குழந்தைகள் கடத்தி செல்வதை தடுக்க குழந்தை பிறந்தவுடனே அந்த குழந்தையின் கால்ரேகை பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு அரசு மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக குழந்தைகள் கடத்துவது சாதாரணமாகி விட்டது. குறிப்பாக ஆண் குழந்தைகளை கடத்தி சென்றுவிடுகின்றனர். கடந்த வாரம் இப்படி கடத்தி சென்ற குழந்தையை மீட்டபிறகும் இரு பெண்கள் அந்த குழந்தை மீது உரிமைகோருவதால் மரபணு சோதனை செய்ய முடிவுசெய்யப்பட்டது.
இந்த நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் உசேன்அலி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஈரோடு அரசு மருத்துவமனையில் குழந்தைகள் திருட்டை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள் வார்டில் தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இப்படி இருந்தாலும் ஆண் குழந்தை எப்படியாவது திருடிச்சென்று விடுகின்றனர். திருட்டை தடுக்க இனி பிறக்கும் குழந்தைகளின் கால்ரேகை பாதிவு செய்யப்பட உள்ளது. பிறக்கும் குழந்தைகளில் கை ரேகை சரியாக இருக்காது. கால்ரேகை துல்லியமாக இருக்கும். இதை வைத்து குழந்தைகள் திருட்டுபோனால் கண்டுபிடித்து விடாலம் என்றார்.