Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

8 நா‌ட்களு‌க்கு ‌பி‌ன் உத்தப்புரம் மக்கள் ஊர் திரும்பின‌ர்!

8 நா‌ட்களு‌க்கு ‌பி‌ன் உத்தப்புரம் மக்கள் ஊர் திரும்பின‌ர்!
, புதன், 14 மே 2008 (10:36 IST)
உத்தப்புரம் சுவர் இடிப்பு பிரச்சினையில் மலையில் தங்கி இருந்த பொதுமக்கள் தங்கள் 8 நாள் போராட்டத்தை கை‌வி‌‌ட்டு‌வி‌ட்டு குடும்பத்தோடு ஊருக்கு திரும்பின‌ர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே எழுமலையை அடுத்த உத்தப்புரம் கிராமத்தில் கட்டப்பட்டு இருந்த தடுப்பு சுவரின் ஒருபகுதி கடந்த 6ஆ‌ம் தேதி இடிக்கப்பட்டு அந்த இடத்தில் பாதை அமைக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு சமூகத்தினர் ஊரை காலி செய்து ‌வி‌ட்டு குழந்தைகளுடன் அருகில் உள்ள தாழையூத்து மலை பகுதி‌யி‌ல் தங்கின‌ர். அவர்கள் எ‌ட்டு நா‌‌ட்களாக போரா‌ட்‌ட‌ம் நட‌த்‌தி வ‌ந்தன‌ர்.

இந்த நிலையில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் மலைக்கு சென்று அவ‌ர்க‌ளிட‌ம் பேச்சுவார்த்தை நடத்தினார். அ‌ப்போது, உங்கள் கோரிக்கைகளை முதலமைச்சர் கருணாநிதியிடம் கூறி அதை நிறைவேற்றுவேன் என்று உறுதி அளித்தார்.

இதையடுத்து நேற்று போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்த 30 கிராம பிரதிநிதிகளை அழைத்து பேச முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி இந்த சமாதானக்கூட்டம் நேற்று எழுமலை பேட்டை காளியம்மன் கோவில் திருமண மகாலில் நடந்தது.

இதில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், 30 கிராம பிரதிநிதிகளும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் அரசு சார்பில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளான புறக்காவல் நிலையம் அமைத்தல், 1989-ம் ஆண்டு நடந்த கலவரத்தில் இடிக்கப்பட்ட வீடுகளுக்கு பட்டாவழங்கி வீடு கட்டி கொடுத்தல் உள்பட 4 கோரிக்கைகளை உடனே நிறைவேற்றி தருவது எ‌ன்று முடிவு எடு‌க்க‌ப்ப‌ட்டது.

முத்தாலம்மன் கோவில் வளாகத்திற்கு பட்டா வழங்குவது குறித்து சட்ட‌ப்பேரவை கூட்டத் தொடர் முடிந்தபின் முதலமைச்சரை புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏ. கோ.தளபதி ஆகியோர் தலைமையில் உத்தபுரம் போராட்டக்குழு தலைவர் முருகேசன் உள்பட 7 பேர் சந்தித்து பேசுவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

இந்த முடிவை போராட்ட குழுவினரும், சுற்றுப்பகுதி கிராம பிரதிநிதிகளும் ஏற்றுக்கொண்டனர். பின்னர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அனைவரும் மலைக்கு சென்று அங்குள்ள மக்களை சந்தித்து விவரத்தை கூறினார்கள். இதனை அடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

பின்னர் அனைவரும் குடும்பத்துடன் சொ‌ந்த ஊரான உத்தப்புரம் கிராமத்து‌க்கு மூ‌ட்டை முடி‌ச்சுகளுட‌ன் வே‌னி‌ல் செ‌ன்றன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil