சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.கே.கங்குலி மே 19ஆம் தேதி பதவியேற்று கொள்கிறார். அவருக்கு ஆளுநர் பர்னாலா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.ஷா, டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டார்.
ஒரிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த ஏ.கே.கங்குலியை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல் நியமித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.கே.கங்குலி மே 19ஆம் தேதி பதவியேற்று கொள்கிறார்.
ஆளுநர் மாளிகையில் நடக்கும் இந்த விழாவில் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கங்குலி, 1994ஆம் ஆண்டு கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2006 ஏப்ரல் முதல் ஒரிசா உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி வந்தார்.