Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இதர மா‌நில‌ங்களை ‌விட த‌மிழக‌த்‌தி‌ல் குற்றங்கள் குறைவு: முதல்வர்!

Advertiesment
இதர மா‌நில‌ங்களை ‌விட த‌மிழக‌த்‌தி‌ல் குற்றங்கள் குறைவு: முதல்வர்!
, செவ்வாய், 13 மே 2008 (09:15 IST)
''இதர மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் நடைபெற்ற குற்றச் ‌நிக‌ழ்வுக‌ள் குறைவு'' என்று முதல்வர் கருணாநிதி கூ‌றியு‌ள்ளா‌ர்.

சட்டப்பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து முத‌ல்வ‌ர் பேசுகை‌யி‌ல், குற்றச் ‌நி‌க‌ழ்வுகளை பரந்த நோக்கோடு பார்க்க வேண்டும். சென்ற ஆண்டு இந்த ஆண்டு என்று குறுகிய நோக்குடன் பார்க்கக் கூடாது.

அ.இ.அ.தி.மு.க. ஆட்சியிலும் தி.மு.க. ஆட்சியிலும் கடந்த 4, 5 ஆண்டுகளில் நடந்த கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைச் சம்பவங்களை ஒப்பிட வேண்டும்.

2006ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் சொத்து சம்பந்தமாக 17,580 குற்றங்கள் நடந்துள்ளன. 2007-ல் 17,652 ‌நி‌க‌ழ்வுக‌ள். ஆனால், 2002ம் ஆண்டு அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் 25,050 குற்றங்கள் நடந்துள்ளன. இவை 2003-ல் 23,818, 2004-ல் 22,340, 2005-ல் 20,173 என குற்றங்கள் நடந்துள்ளன.

பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால், வித்தியாசம் இருக்கிறது. மொத்த வன்முறைக் குற்றங்களைப் பொருத்தவரையில் 2007-ல் 22,969 நடந்துள்ளன. 2008-ல் 18,798 ‌நி‌க‌ழ்வுக‌ள் நடந்துள்ளன. ஆனால், அ.இ.அ.தி.மு.க. ஆட்சியைப் பொருத்தவரையில் 2002-ல் 28,876, 2003-ல் 37,292, 2004-ல் 37,492, 2005-ல் 37,429 ‌நி‌க‌ழ்வுக‌ள் நடந்துள்ளன.

பொதுவாக தமிழக நகரங்களை பிற மாநில நகரங்களுடன் ஒப்பிட்டாலேயே குற்றச் ‌நிக‌ழ்வுக‌ள் குறைவு என்பது தெரியவரும்.

2006-ம் ஆண்டில் ஹைதராபாத் நகரில் 193 கொலைகள், 12 கொள்ளைகள், 17,295 மொத்த குற்றங்கள் நடந்துள்ளன. ெல்லியில் 396 கொலைகள், 12 கொள்ளைகள், 26,284 குற்றச் ‌நி‌க‌ழ்வுக‌ள் நடந்துள்ளன. மும்பையில் 239 கொலைகள், 29 கொள்ளைகள், 31,070 குற்றங்கள் நடந்துள்ளன.

ஆனால், இதே காலத்தில் சென்னையில் 131 கொலைகள், 5 கொள்ளைகள், மொத்த குற்றங்கள் 31,070 மட்டுமே நடந்துள்ளன.

காவல் துறை என்பது பொதுவான துறைதான். தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும், அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும் அதற்குக் கட்டுப்பட்ட துறைதான். நள்ளிரவில் கைது செய் என்று சொன்னாலும் செய்துதான் தீர வேண்டும். வேண்டுமானால், மீண்டும் ஆட்சிக்கு வந்த பின் மன்னியுங்கள் என்று கேட்கலாம். நாங்களும் "மறப்போம் மன்னிப்போம்' என்று சொன்ன தலைவரின் தம்பியாயிற்றே எ‌ன்று முத‌ல்வ‌‌ர் கருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil