Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சத்தியமங்கலம் மலைகிராம மக்கள் வாக்காளர் அட்டையை திரும்ப ஒப்படைக்க முடிவு!

வேலு‌ச்‌சா‌மி

சத்தியமங்கலம் மலைகிராம மக்கள் வாக்காளர் அட்டையை திரும்ப ஒப்படைக்க முடிவு!
, திங்கள், 12 மே 2008 (14:49 IST)
மலைப்பகுதியில் வாழும் பழங்குடி மக்களுக்கு ாதிசான்றிதல் வழங்க அரசு தாமதப்படுத்தி வருவதை கண்டித்து வாக்காளர் அடையாள அட்டையை அரசிடமே திரும்ப ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் தாளவாடி, கடம்பூர், ஆசனூர், பர்கூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மலைப்பகுதி மக்களில் பெரும்பாலனோர் ஊராளி, சோளகர், இருளர் என்ற பழங்குடிமக்கள் ஆவர். இவர்கள் தங்களுக்கே உள்ள மொழியில் பேசிவருகின்றனர். இவர்களுக்கு கோட்டாசியர்தான் சாதி சான்றிதழ் வழங்கவேண்டும். இங்கு வசிக்கும் இந்த மக்களுக்கு சாதிசான்றிதழ் கேட்டு பல ஆண்டுகளாக இவர்கள் போராடியும் இதுவரை நடவடிக்கை இல்லை.

காரணம் ஈரோடு மாவட்டத்தில் இவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கினால் உயர் ஜாதியினர் என வழங்க முடியும். அதே இவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் சென்று சாதிசான்றிதழ் பெற்றால் தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் என சான்றிதழ் வழங்கப்படும் என்பதே அரசுதரப்பில் இருந்து இவர்களுக்கு வாய்மொழியாக கிடைக்கும் பதிலாகும்.

தனால் இந்த மக்கள் தங்கள் குழந்தைகளை படிக்கவைக்கவும், பழங்குடி மக்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள் பெற முடியமால் தவித்து வருகின்றனர். இதனால் அரசு வழங்கும் வாக்காளர் அட்டையோ வாக்குரிமையோ எங்களுக்கு தேவையில்லை. ஆகவே சமீபத்தில் நடக்கும் ஜமாபந்தியில் கோட்டாசியாரிடம் வாக்காளர் அடையாள அட்டையை திருப்பி ஒப்படைக்க முடிவு செய்யுள்ளதாக முடிவு செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil