சென்னை அருகே நேற்று இரவு நடந்த தீ விபத்தில் 2 பேர் பலியானார்கள். இந்த தீ விபத்தில் 6 குடிசைகள் எரிந்து சாம்பலானது.
சென்னை அடுத்த எர்ணாவூர் அன்னைசிவகாமி நகரில் வசித்து வந்தவர் பிரியா (30). இவர் தனது 2 வயது மகள் பவானியுடன் வீட்டில் நேற்றிரவு இருந்து கொண்டிருந்தார். அப்போது வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் சிக்கி இரண்டு பேரும் பலியாயினர்.
தீ அருகில் உள்ள குடிசைகளுக்கும் பரவியது. இதில் 6 குடிசைகள் எரிந்து சாம்பலானது. இந்த தீ விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் திருவொற்றியூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இறந்து போன இரண்டு பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தகவல் அறிந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜேந்திர குமார், வருவாய் துறை அலுவலர் மோகன சுந்தரம் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இந்த தீ விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.