''பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர் ராஜேஷ்குமாருக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும்'' என்று பால்வளத்துறை அமைச்சர் மதிவாணன் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது தி.மு.க உறுப்பினர் ராஜேந்திரன் பேசுகையில், "பால்வளத் துறையில் சாதாரண ஊழியராக பணிபுரிபவரின் மகன் ராஜேஷ்குமார்.
இவர் பிளஸ் 2 தேர்வில் 1,182 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலாவதாக வந்துள்ளார். இவருக்கு பால் வளத்துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட உதவித் தொகைகள் வழங்கப்படுமா? என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் மதிவாணன், மாணவர் ராஜேஷ் குமாருக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகையும், அவர் பி.எஸ்சி பால்வள அறிவியல் மற்றும் பி.டெக் படித்தால் அவருக்கு 40 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையும், கணினியும் வழங்கப்படும் என்றார்.