Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இ‌ந்த ஆ‌‌ண்டே சம‌‌ச்‌சீ‌ர் க‌ல்‌வி: ராமதாஸ்!

இ‌ந்த ஆ‌‌ண்டே சம‌‌ச்‌சீ‌ர் க‌ல்‌வி: ராமதாஸ்!
, ஞாயிறு, 11 மே 2008 (11:04 IST)
"அரசுப் பள்ளிக‌ளி‌ல் முதல் 3 இடங்களில் ஒன்றைக் கூட மாணவ‌ர்க‌ள் பிடிக்கவில்லை. இந்நிலைக்கு சமச்சீர் கல்வி இல்லாததே காரணம். இதனா‌ல் இ‌ந்தா‌ண்டே சம‌ச்‌சீ‌ர் க‌ல்‌வியை கொ‌ண்டு வரவே‌ண்டு‌ம்'' என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

ிருஷ்ணகிரியில் அவர் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், பொறியியல் கல்லூரிகளில் சேர தகுதி மதிப்பெண் குறைத்துள்ளது தேவையில்லாதது. தனியார் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்பவே தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

கல்விக்கட்டணம் உயர்த்தப்பட்டால் போராட்டம்!

தமிழகத்தில் மொத்தமாக ஒரு லட்சம் பொறியியல் இடங்களே உள்ளன. ஆனால் அதைவிட அதிகளவிலான மாணவர்கள் 60 ‌விழு‌க்கா‌ட்டி‌ற்கு‌ம் மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தனியார் கல்லூரிகளின் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கு ஆதரவாக, பணப்பெட்டியை நிரப்புவதற்காக தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக் கட்டணம் உயர்த்தப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன. அதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டால் பா.ம.க மாணவர் சங்கம் எதிர்த்துப் போராடும். கல்விக்கட்டணத்தை குறைப்பதுடன், கட்டாய நன்கொடையை தடுத்தால் மட்டுமே காலியிடங்கள் நிரம்பும். ஏழை, எளிய மாணவர்களுக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்பட வேண்டும்.

இந்தாண்டே சமச்சீர் கல்வி!

பிளஸ் 2 தேர்வில் தனியார் பள்ளி மாணவர்களே முதலிடம் பிடித்துள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களில் ஒருவர் கூட, மொத்த மதிப்பெண்களிலோ அல்லது தனிப் பாடத்திலோ முதல் 3 இடங்களில் ஒன்றைக் கூட பிடிக்கவில்லை. இந்நிலைக்கு சமச்சீர் கல்வி இல்லாததே காரணம். அரசுப் பள்ளிகளில் தரமான கல்விக்கு அரசு பொறுப்பேற்பதுடன், உறுதி அளித்தபடி இந்தாண்டே சமச்சீர் கல்வி கொண்டு வர வேண்டும் எ‌ன்று ராமதா‌ஸ் கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil