Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌பிள‌ஸ் 2 விடைத்தாள் நக‌ல், மறுகூட்டலுக்கு 12ஆ‌ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!

‌பிள‌ஸ் 2 விடைத்தாள் நக‌ல், மறுகூட்டலுக்கு 12ஆ‌ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!
, சனி, 10 மே 2008 (09:49 IST)
பிளஸ்2 தேர்வு விடைத்தாள் நக‌ல் பெறவும், மறுகூட்டலுக்கும் 12ஆ‌ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எ‌ன்று அரசு தேர்வுகள் இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து அரசு தேர்வுகள் இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் கூறுகை‌யி‌ல், ‌பிள‌ஸ் 2 கணிதம், இயற்பியல், வேதியில், உயிரியல், விலங்கியல், தாவரவியல் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடங்களுக்கு விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் 12ஆ‌ம் தேதி முதல் 15ஆ‌ம் தேதி வரை சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனர் அலுவலகத்திலும், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களிலும், மாவட்ட கல்வி அலுவலகங்களிலும், அரசு தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலங்களிலும் வழங்கப்படும்.

பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை மேற்கண்ட அலுவலகங்களில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். விடைத்தாள் நகல் பெற ஒரு பாடத்திற்கு கட்டணம் ரூ.275. இந்த தொகையை தேசியமயமாக்கப்பட்ட ஏதாவது ஒரு வங்கியில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் அரசு தேர்வுகள் இயக்குனர், சென்னை-6` என்ற பெயரில் நேரில் ஒப்படைத்து விண்ணப்ப படிவங்களை பெற வேண்டும்.

விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்க வேண்டும். மறுமதிப்பீடு செய்ய விரும்புபவர்கள் அல்லது மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் நகல் பெற்ற 5 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மறுமதிப்பீடு கட்டணம் ஒரு பாடத்திற்கு ரூ.505 ஆகும். மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்திற்கு ரூ.305. மற்ற பாடங்களுக்கு ரூ.205. இதற்கான விண்ணப்ப படிவங்கள் விடைத்தாள் நகல் வழங்கும்போது இணைத்து அனுப்பப்படும்.

தேர்வு எழுதிய அனைத்து பாடங்களுக்கும் மறுகூட்டல் செய்ய விரும்புபவர்கள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்கள். அரசு தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள், அரசு தேர்வுகள் இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்ப படிவங்களை 12-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம். அரசு தேர்வு துறை இணையதள முகவரியிலும் விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்ளலாம் எ‌ன்று வசந்தி ஜீவானந்தம் கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil