பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு சிறப்பு துணைத்தேர்வு எழுத வரும் 16ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை விண்ணப்பம் வழங்கப்பட உள்ளது.
நேற்று வெளியிடப்பட்ட பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு அவர்கள் இந்த ஆண்டு கல்வியை தொடரும் வகையில் சிறப்பு துணைத்தேர்வு நடைபெற உள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் வரும் 16ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளன.
பள்ளி மாணவராக தேர்வு எழுதியவர்கள் அவரவர் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய மையம் மூலமாகவும் விண்ணப்பங்களை பெறலாம். பிறகு பூர்த்தி செய்து அந்த பள்ளிகளிலேயே ஒப்படைக்க வேண்டும்.
கடந்த மார்ச் 2008ல் தேர்வு எழுதாமல் முந்தைய பருவங்களில் தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள் சிறப்பு துணைத்தேர்வு எழுத விரும்பினால் அரசு தேர்வு இயக்குனர் அலுவலகம், மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள், முதன்மை கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்கள், ஆகியவற்றில் விண்ணப்பங்களை பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அங்கேயே 15ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
சிறப்பு துணைத்தேர்வு ஜூன் 23ஆம் தேதி முதல் ஜூலை 3ஆம் தேதி வரை நடக்கிறது.
தேர்வு அட்டவணை விவரம் :
ஜூன் 23ஆம் தேதி காலை தமிழ் முதல் தாள்
24ஆம் தேதி காலை தமிழ் 2-வது தாள்
25ஆம் தேதி காலை ஆங்கிலம் முதல் தாள்
26ஆம் தேதி காலை ஆங்கிலம் 2-வது தாள்
27ஆம் தேதி காலை இயற்பியல், வணிகவியல்
மாலை உளவியல், தமிழ் மற்றும் ஆங்கிலம் சுருக்கெழுத்து
28ஆம் தேதி காலை வேதியியல், பொருளாதாரம்
30ஆம் தேதி காலை கணிதம், அக்கவுண்டன்சி, விலங்கியல், மாலை அடிப்படை அறிவியல், புவியியல்
ஜூலை 1ஆம் தேதி காலை உயிரியியல், வரலாறு, தாவரவியல், மாலை தொழில் பாடங்கள்
2ஆம் தேதி காலை உயிரி வேதியியல், கம்ப்ïட்டர் அறிவியல், அரசியல் அறிவியல், மாலை மைக்ரோ பயாலஜி, சிறப்பு தமிழ்
3ஆம் தேதி காலை வர்த்தக கணிதம், இந்திய கலாசாரம், நர்சிங் (பொது), நிïட்ரிசியன் மற்றும் டயட்டிக்ஸ். மாலை கம்யூனிகேட்டிவ் இங்கிலீஸ், மனை அறிவியல், புள்ளியியல், தட்டச்சு (தமிழ் மற்றும் ஆங்கிலம்)