''பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் மே 21ஆம் தேதிக்குள் வழங்கப்படும்'' என்று அரசு தேர்வுதுறை இயக்குனர் வசந்தி கூறினார்.
சென்னையில் இன்று தமிழக அரசு தேர்வுதுறை இயக்குனர் வசந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள் மே 21ஆம் தேதிக்குள் வழங்கப்படும்.
மாணவர்கள் கணிதம், இயற்பியல், வேதியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல் மற்றும் கனிணி அறிவியல் பாடங்களுக்கு விடைத்தாள் நகல் கேட்டு மே 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
தோல்வி அடைந்த மாணவர்கள் ஜூன் 23ஆம் தேதி முதல் ஜூலை 3ஆம் தேதி வரை சிறப்பு தேர்வு எழுதலாம் என்று தேர்வுதுறை இயக்குனர் வசந்தி கூறினார்.