பிளஸ் 2 தேர்வில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடை சேர்ந்த மாணவி தரணி மற்றும் செங்கல்பட்டை சேர்ந்த மாணவர் ராஜேஷ்குமார் ஆகியோர் தலா 1182 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளனர்.
சென்னையில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவை தமிழக அரசின் தேர்வுத் துறை இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் வெளியிட்டார்.
இதில் தமிழை முதல் பாடமாக கொண்டு படித்த நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடை சேர்ந்த மாணவி தரணி, செங்கல்பட்டை சேர்ந்த மாணவர் ராஜேஷ்குமார் ஆகியோர் 1200க்கு 1182 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மாணவி ரம்யா, நாமக்கல்லை சேர்ந்த குமார்விக்ரம் ஆகியோர் 1200க்கு 1181 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளனர்.
நாமக்கல்லை சேர்ந்த மாணவி தீபா 1180 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பெற்றுள்ளார்.
தமிழ் அல்லாத வேறு பாடங்களை முதல் பாடமாக எடுத்து பயின்றவர்களில் சென்னை அண்ணாநகரை சேர்ந்த மாணவி ஆஷா கணேசன் 1200க்கு 1191 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தை பெற்றுள்ளார்.
சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த மாணவர் முரளிகிருஷ்ணன் 1188 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தையும், கோபாலபுரத்தை சேர்ந்த மாணவர் ஹரிஷ் சிறிராம் 1187 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.