இன்று வெளியிட்டப்பட்ட பிளஸ் 2 தேர்வு முடிவில் 84.4 விழுக்காடு தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
பிளஸ் 2 தேர்வு இன்று காலை 9 மணிக்கு அரசு பள்ளித் தேர்வுகள் துறை இயக்ககம் வெளியிட்டது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மூலம் தேர்வுகள் எழுதியவர்கள் மொத்தம் 6,41,230 பேர். பள்ளிகள் மூலமாக தேர்வு எழுதியவர்கள் 5,87,994 பேர்.
பள்ளிகள் மூலம் தேர்வு எழுதிய மாணவர்கள் 2,79,025, மாணவிகள் 2,70,371.
தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 3 விழுக்காடு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 81 விழுக்காடாக இருந்தது. இந்த ஆண்டு 84.4 விழுக்காடாக உயர்ந்துள்ளது. மொத்தம் 4,96,494 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
60 விழுக்காட்டுக்கு மேல் எடுத்தவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 3,29,091பேர். இந்த ஆண்டு 3,60,722 பேர்.
வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு மாணவர்கள் 77.4 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு 81.3 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு மாணவிகள் 84.6 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு 87.3 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஒவ்வொரு பாடத்திலும் இந்த ஆண்டு 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றவர்கள் விவரம் வருமாறு:
இயற்பியல் 282 பேர், வேதியியல் 306 பேர், உயிரியல் 153 பேர், தாவரவியல் 19 பேர், விலங்கியல் 1, கணிதம் 3,852 பேர், கணினி அறிவியல் 60 பேர், வணிகவியல் 148 பேர், கணக்குபதிவியல் 739, வணிக கணிதம் 291 பேர்.