Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மு‌ட்டு‌க்கா‌ட்டி‌‌ல் ரூ.150 கோடி‌யி‌ல் கடலடி ‌நீ‌ர்மி‌ன் கா‌ட்‌சியக‌ம்: சுரே‌ஷ்ராஜ‌ன்!

மு‌ட்டு‌க்கா‌ட்டி‌‌ல் ரூ.150 கோடி‌யி‌ல் கடலடி ‌நீ‌ர்மி‌ன் கா‌ட்‌சியக‌ம்: சுரே‌ஷ்ராஜ‌ன்!
, வியாழன், 8 மே 2008 (16:39 IST)
''சென்னமுட்டுக்காட்டிலூ.150 கோடி‌யி‌லகடலடி நீரமீனகாட்சியகமஒன்றஅமைக்கப்படும்'' என்றசுற்றுலாததுறஅமைச்சரஎன். சுரேஷராஜனகூறியு‌ள்ளா‌ர்.

சட்ட‌ப்பேரவை‌யி‌லஇ‌ன்றஅமை‌ச்ச‌ரசுரே‌ஷ்ராஜ‌னதா‌க்க‌லசெ‌ய்சுற்றுலா துறை மானிய கோரிக்கை மீதான கொள்கை விளக்க குறிப்‌பி‌ல், முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலத்தில் ரூ.150 கோடி மதிப்பில் கடலடி நீர் மீன் காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. அரசு, தனியார் பங்கேற்பு அடிப்படையில் இது அமையும்.

முட்டுக்காடு படகு இல்லத்தில் லேசர் கண்காட்சி நடத்தப்படும். மாமல்லபுரம் கடற்கரை குடில்கள் வளாகத்தில் மூங்கில் குடிசைகள் அமைக்கப்படும். தமிழ்நாட்டில் ஹெலிகாப்டர் சுற்றுலா நடத்தப்படும்.

சென்னையில் இருந்து மாமல்லபுரத்திற்கு சுற்றுலா சம்பந்தமாக எந்த இடத்திலும் ஏறலாம்- இறங்கலாம் என்ற திட்டம் வரும் ஆண்டு அறிமுகப்படுத்தப்படும்.

மாமல்லபுரத்திற்கு அருகே உள்ள கடம்பாடி கிராமத்தை ஊரக சுற்றுலா தலமாக அறிவித்து மேம்பாடு செய்யப்படும்.

’கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை கடல் காற்றினால் சேதம் அடையாமல் இருக்க ரூ.80 லட்சம் செலவில் பாலி சிலிகான் என்ற ரசாயன பூச்சு பூசப்படும் எ‌ன்றகூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil