''கிண்டி கத்திபாரா மேம்பாலத்திற்கு முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு பெயரை சூட்ட வேண்டும்'' என்று காங்கிரஸ் உறுப்பினர் ராமன் கேட்டுக் கொண்டுள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது துணை கேள்வி ஒன்றை காங்கிரஸ் உறுப்பினர் இ.எஸ்.எஸ்.ராமன், கிண்டி கத்திபாரா மேம்பாலத்திற்கு நேரு பெயரை சூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதற்கு பதிலளித்த நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன், தேசிய நெடுஞ்சாலைத் துறை மூலமாக கிண்டி கத்திபாரா மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக முதல்வர் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்திவிட்டு மத்திய அரசுடன் கலந்து பேசி நிச்சயம் பரிசீலிக்கப்படும் என்றார்.