தமிழகத்தில் நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரியில் கடந்த மார்ச் 3ஆம் தேதி பிளஸ் 2 தேர்வுகள் தொடங்கி மார்ச் 24ஆம் தேதி முடிவடைந்தது. 1,600 தேர்வு மையங்களில் 5 லட்சத்து 87 ஆயிரத்து 245 மாணவர்கள் தேர்வு எழுதினர்.
சென்னை மாவட்டத்தில் மட்டும் 135 தேர்வு மையங்களில் 45,891 மாணவர்கள் தேர்வு எழுதினார். இந்த ஆண்டு புதிதாக வினாக்களை படித்துப் பார்க்க தனியாக 10 நிமிட நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை வெளியிடப்படுகிறது.
இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பிளஸ்2 தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி காலை வெளியிடப்படும்' என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டை பிளஸ்2 தேர்வு முடிவு மே 14ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால் இந்த 5 நாட்களுக்கு முன்னதாக வெளியிடப்படுகிறது. மாணவர்களுக்கு சான்றிதழ்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள அரசு தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் நாளை காலை 9 மணிக்கு தேர்வு முடிவு வெளியிடப்படும் அதே நேரத்தில் பள்ளிக் கூடங்களில் மாணவர்கள் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம்.