சென்னையில் இன்று வெயில் அளவு 41 டிகிரியாக இருந்தது என்றும், அடுத்த 48 மணி நேரத்தில் இதே அளவு வெப்ப நிலை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கோடை வெயில் ஆரம்பித்ததில் இருந்து தொடர்ந்து 40 டிகிரிக்கு மேல் வெப்பம் குறையாமல் இருந்து கொண்டே இருக்கிறது. மாலை, இரவு நேரங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்தாலும் அதிகபட்ச வெப்பநிலை 42 டிகிரி செல்சியசாகவே இருக்கும்.
தமிழகம், புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.