Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வைகோவுக்கு ஜெயலலிதா வாழ்த்து!

Advertiesment
வைகோவுக்கு ஜெயலலிதா வாழ்த்து!
, செவ்வாய், 6 மே 2008 (15:34 IST)
ம.‌தி.மு.க.‌வி‌ன் 15ஆ‌ம் ஆ‌ண்டு தொட‌க்க ‌விழாவையொ‌ட்டி அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயலாள‌ர் வைகோவு‌க்கு அ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் ஜெயல‌லிதா வா‌‌‌ழ்‌த்து தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வைகோவுக்கு அனு‌ப்‌பியு‌ள்ள வாழ்த்து செய்‌தி‌யி‌ல், கால ஓட்டத்தில் நிகழும் பல்வேறு மாற்றங்களில் கரைந்து போகாமலும், சுய முகத்தை இழக்காமலும், தான் சார்ந்திருக்கும் தமிழ் சமூகத்தை புத்துருவாக்கம் செய்யும் பணியில் மறு மலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இன்றோடு 14 ஆண்டுகள் நிறைவடைந்து, 15ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பது அறிந்து பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

ம.தி.மு.க.வை இரும்பு எஃகு கோட்டையாக நிர்மாணிப்பதற்கான லட்சியப் பயணத்தில் ஏற்படும் தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி, துரோகங்களை தூள் தூளாக்கி, நிகழ்கால கோளாறுகளை சரி செய்து, எதிர்கால வரலாற்றை உருவாக்குவதில் அதன் பொதுச்செய லாளராகிய தங்களது பணி அளப்பரியது.

தங்களது பயணத்தில் அதிகார வர்க்கம் போடும் பரமபத அரசியல் சித்து விளையாட்டுகளை முறியடித்து வெற்றிச் சங்கொலி திக்கெட்டும் முழங்க த‌ங்களு‌க்கு‌ம், ம.‌தி.மு.க.வு‌க்கு‌ம் எனது இதயபூ‌ர்வமான ந‌ல்வா‌ழ்‌த்து‌க்களை தெ‌ரி‌வி‌த்து‌க் கொ‌ள்‌கிறே‌ன் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil