Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

3 ஆ‌ண்டுக‌ளி‌ல் 30 ல‌ட்ச‌ம் பேரு‌க்கு வேலை வா‌ய்‌ப்பு உருவா‌க்க‌ப்படு‌ம்: மு.க.‌ஸ்டா‌லி‌ன்!

3 ஆ‌ண்டுக‌ளி‌ல் 30 ல‌ட்ச‌ம் பேரு‌க்கு வேலை வா‌ய்‌ப்பு உருவா‌க்க‌ப்படு‌ம்: மு.க.‌ஸ்டா‌லி‌ன்!
, திங்கள், 5 மே 2008 (15:55 IST)
அடு‌த்த மூ‌‌ன்று ‌ஆ‌ண்டுக‌ளி‌ல் தகவ‌ல் தொ‌ழி‌ல் நு‌ட்ப‌த்துறை‌யி‌ல் கூடுதலாக 30 ல‌ட்ச‌ம் வேலைவா‌ய்‌ப்புக‌ள் உருவா‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் 2011 ஆ‌ண்டி‌ல் இ‌ந்த துறை‌யி‌ல் 11 ‌விழு‌க்கா‌ட்டி‌ல் இரு‌ந்து 25 ‌விழு‌க்காடாக உ‌ற்ப‌த்‌தி‌ அ‌திக‌ரி‌க்கு‌ம் எ‌ன்று‌ம் அமை‌ச்ச‌ர் மு.க.‌ஸ்டா‌லி‌ன் கூ‌றினா‌ர்.

சட்ட‌ப்பேரவை‌யி‌ல் அமை‌ச்ச‌ர் மு.க.‌ஸ்டா‌லி‌ன் தா‌க்க‌ல் செ‌ய்த தொழில்துறை மானிய கோரிக்கை மீதான கொள்கை விளக்க குறிப்‌பி‌ல், தகவல் தொழில்நுட்பவியல் துறையில் தமிழ்நாடு பெரும் முன்னேற்றத்தை பதித்து வருகிறது. 2006- 2007ல் 20ஆயிரத்து 700 கோடியாக இருந்த மின்பொருள் ஏற்றுமதி 2007-2008ல் ரூ.28,000 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலீட்டிற்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு உருவாகி வருகிறது. இதனால் தகவல் தொழில் நுட்பவியல் துறை நல்ல வளர்ச்சியை கண்டு வருகிறது.

சென்னை தரமணியில் 2-வது டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இதே போல் 3-வது டைடல் பூங்காவும் 2009-ல் ஆண்டில் செயல்பட தொடங்கும். இதன் மூலம் 40,000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும் 15,000 பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பும் கிடைக்கும்.

நாட்டிலேயே அதிக கம்பி வட தொலைக்காட்சி சேவை அளிக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இதில் பல புகார்கள் வந்ததால் அரசே ஏற்று நடத்தும் அரசு கேபிள் டிவி நிறுவனத்தை தமிழக அரசு ஏற்படுத்தியது. அரசு கேபிள் டி.வி. நிறுவனம் 6-8 நகரங்கள், பேரூராட்சிகளில் அதிநவீன உபகரணங்களை கொண்டு டிஜிட்டல் ஹெட் நிறுவ உத்தேசித்துள்ளது.

ஒவ்வொரு தலைமுறையும் 80 அலை வரிசைகளை கொண்ட தொலைக்காட்சி குறிப் பு களை 100 கிலோமீட் டர் தூரத்தில் உள்ளூர் கேபிள் இயக்குபவர்களுக்கு எடுத்து செல்லும். மேற்பட்ட தலைமுனைகள் கோவை, நெல்லை, திருவண்ணாமலை, தஞ்சாவூரில் முதல் கட்டமாக நிறுவ உலகளாவிய ஒப்பந்த புள்ளிகள் பெறப்பட்டுள்ளது.

சென்னையில் தலை முனையை அமைக்க உலகளாவிய ஒப்பந்த புள்ளிகள் கோர முடிவு செய்யப்பட்டுள்ளது. இவை செப்டம்பர் முதல் இயங்கத் தொடங்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. கேபிள், தொலைக்காட்சி தொழிலாளர்களுக்கான நலவாரியம் ஒன்றையும் அரசு அமைத்துள்ளது எ‌ன்று தெ‌ரி‌வி‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil