நாகப்பட்டினம் மருத்துவமனை நிர்வாகச் சீர்கேட்டைக் கண்டித்து வருகிற 5 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாகப்பட்டினம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உட்பட அனைத்து மருத்துவமனைகளிலும் நிலவி வரும் அவலநிலைக்குக் காரணமான தி.மு.க. அரசைக்கண்டித்தும், நிர்வாகச் சீர்கேடுகளை உடனடியாகத் தீர்க்க வலியுறுத்தியும் வருகின்ற 5-ஆம் தேதி காலை 10 மணி அளவில், நாகப்பட்டினம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கழக அமைப்புச் செயலர் கருப்பசாமி எம்.எல்.ஏ. தலைமை வகிப்பார். நாகப்பட்டினம் மாவட்டக் கழகச் செயலர் ஓ.எஸ். மணியன் முன்னிலை வகிப்பார்" என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.