தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த விரிசல் உரிய நேரத்தில் கண்டறியப்பட்டதால் திருச்சி- சென்னை பல்லவன் விரைவு ரயில் விபத்தில் இருந்து தப்பியது.
திருச்சி பொன்மலை ரயில் நிலையம் அருகில் தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த விரிசலை ரயில்வே ஊழியர்கள் இன்று அதிகாலை கண்டறிந்தனர்.
இதுகுறித்து திருச்சி ரயில் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காலை 6.30 மணிக்கு அங்கிருந்து சென்னைக்குப் புறப்பட வேண்டிய பல்லவன் விரைவு ரயில் நிறுத்தப்பட்டது.
தண்டவாள விரிசல் சரிசெய்யப்பட்ட பிறகு அரைமணி நேரம் தாமதமாகப் புறப்பட்ட பல்லவன் ரயில், குறிப்பிட்ட நேரத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்தடைந்தது.
இதற்கிடையில், தண்டவாள விரிசலால் திருச்சி மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.