தமிழக காங்கிரஸ் மேலிட ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் வயலார் ரவி, முதலமைச்சர் கருணாநிதியை இன்று சந்தித்து பேசினார்.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள முதலமைச்சர் கருணாநிதி வீட்டில் மத்திய அமைச்சர் வயலார் ரவி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் நடந்தது.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழக காங்கிரஸ் மேலிட ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதால் மரியாதை நிமித்தமாக முதல்வரை சந்தித்து பேசினேன்.
சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. இதற்கான நிலங்கள் விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் கையகப்படுத்தப்படும்.
வாங்கப்படும் நிலங்களுக்கு மார்க்கெட் விலை கொடுக்கப்படும். மக்கள் விருப்பத்துடன் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால்தான் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். எனவே பொதுமக்கள் ஒத்துழைப்புடன்தான் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஏற்படுத்தப்படும் என்று வயலார் ரவி கூறினார்.