ஆம்பூர் அருகே நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது அரசு பேருந்து மோதிக் கொண்ட விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே சாலை ஓரத்தில் கன்டெய்னர் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது பெங்களூருவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த அரசு பேருந்து, நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் பேருந்து அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுனர், நடத்துனர் உள்பட மூன்று பேர் நிகழ்விடத்திலேயே பலியானார்கள். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஒருவர் உயிரிழந்தார்.
படுகாயம் அடைந்த 10 பேர் வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.