ஆலங்குடி அருகே கருக்கலைப்பு செய்துகொண்ட பெண் ஒருவர் உயிரிழந்தார். அவருக்குக் கருக்கலைப்பு செய்த செவிலியரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கறம்பக்குடி அருகேயுள்ள கிருஷ்ணம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜாங்கம். இவருடைய மனைவி மகமாயி (30). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இரு ஆண் குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில், மகமாயி மீண்டும் கருவுற்றார். கருக்கலைப்புசெய்துகொள்ள ஆலங்குடி அரசு மருத்துவமனை செவிலியர் செந்தாமரையை அவர் அணுகியுள்ளார். மகமாயிக்கு 15 நாளுக்கு முன்பு தனது வீட்டில்வைத்து செந்தாமரை கருக்கலைப்பு செய்தாராம்.
இதன் காரணமாக மகமாயிக்கு தொடர் உதிரப்போக்கு ஏற்பட்டுள்ளது. தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கடந்த 30ஆம் தேதி இறந்தார்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த கறம்பக்குடி காவல்துறையினர் செவிலியர் செந்தாமரையைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.