தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.8,500 கோடியில் 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தை நிலக்கரி எண்ணெய் நிறுவன குழுமமான கோஸ்டல் எனர்கன் நிறுவனம் அமைக்கிறது.
இது குறித்து இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அகமத் புகாரி கூறுகையில், முதல் கட்டமாக ரூ.4,500 கோடியில் தயாரிக்கப்படும் மின் உற்பத்தி நிலையம் இந்த ஆண்டு மத்தியில் தொடங்கப்படுகிறது. ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் 1,100 மெகாவாட் மின் உற்பத்தி தயாரிக்கப்படுகிறது.
இந்த பணி ஆரம்பித்த 36 மாதத்தில் முடிக்கப்படும். முதல் கட்ட பணிகளின் இடையிலேயே 2ஆம் கட்டப் பணிகள் தொடங்கப்படும்.
சுற்றுச்சூழல் மாசுபடாதவாறு மின் உற்பத்தி தயாரிப்படும். முக்கியமாக உள்ளூரில் சுற்றுச்சூழல் மாசுபடாதவாறு மின் உற்பத்தி நடக்கும். இங்கு தயாரிக்கப்படும் மின்சாரம் தமிழக அரசுக்கும், தனியாருக்கும் வழங்கப்படும்.
வளைகுடா நாடுகள் உள்ளிட்ட உலக நாடுகளில் இருந்து அந்நிய நேரடி முதலீட்டை இந்தியாவிற்கு கொண்டு வரும் வகையில் முதல் கட்டமாக துபாயை சேர்ந்த அப்துல் வாகித் அல் ரோஸ்டாமணி நிறுவனத்துடன் இணைந்துள்ளோம் என்று அமகத் புகாரி தெரிவித்தார்.