கோயில் அர்ச்சகர் வீட்டில் 58 சரவன் நகை மற்றும் ரூ.10,000 ரொக்கப் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில் அர்ச்சகர் கல்யாண சுந்தர ஆச்சாரியார் இன்று அதிகாலை வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது, வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் பூஜை அறையில் இருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்துள்ளனர். பின்னர் அதில் இருந்த 58 சவரன் நகைகள் மற்றும் ரூ.10,000 ரொக்கப் பணம் ஆகியவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த நகையை மகள் திருமணத்திற்காக வைத்துள்ளார்.
கண்விழித்த ஆச்சாரியார், பீரோ திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
காவல்துறையினர் மோப்ப நாயுடன் விரைந்து வந்தனர். கொள்ளையர்களின் கைரேகை பதிவு செய்யப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.