சென்னை மீனம்பாக்கம் அண்ணா சர்வதேச விமான நிலையத்தில் கோலாலம்பூர் பயணியிடமிருந்து ரூ.5கோடி மதிப்புள்ள 5 கிலோ போதைப் பொருளை சுங்கத்துறையினர் இன்று கைப்பற்றினர்.
டெல்லியிலிருந்து சென்னை வந்த கோலாலம்பூரை சேர்ந்த புன்ஷகான் (37) என்ற பெண் தாய்லாந்து செல்லும் விமானத்தில் செல்வதற்காக காத்திருந்தார்.
அப்போது, விமான நிலையத்தில் இருந்து போதை பொருள் கடத்தப்படுவதாக சுங்கத் துறையின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து விமான நிலையம் விரைந்து வந்தனர் சுங்கத்துறையினர். அப்போது சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்றுக் கொண்டிருந்த புன்ஷகானை பிடித்து சுங்கத்துறையினர் சோதனை செய்தனர்.
அப்போது அவர் வைத்திருந்த சூட்கேசின் அடியில் ரூ.5 கிலோ போதை பொருள் இருந்ததை சுங்கத்துறையினர் கண்டுபிடித்தனர். சர்வதேச மதிப்பில் அவற்றின் விலை ரூ.5 கோடியாகும்.
பின்னர் அவரை விமான நிலைய காவல்துறையினரிடம் சுங்கத்துறையினர் ஒப்படைத்தனர்.
இதேபோல் நேற்று பிலிப்பைன்ஸ் ரூ.2.7 கோடி மதிப்புள்ள போதை பொருள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நேற்று பிடிபட்ட பிலிப்பைன்ஸ் பயணிக்கும், இவருக்கும் தொடர்பு இருக்கிறதா என்று காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.