சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நாளை முதல் ஜூன் 8ஆம் தேதி வரை கோடை விடுமுறை விடப்படுகிறது. ஜூன் 9ஆம் தேதி நீதிமன்றம் வழக்கம்போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நாளை முதல் ஜூன் 8ஆம் தேதி முடிய கோடை விடுமுறை விடப்படுகிறது. இந்த கால கட்டத்தில் விடுமுறை கால நீதிமன்றங்கள் மட்டும் இயங்கும். அவசர வழக்கிற்காக மே 2, 5, 9, 12, 16, 19, 23, 26, 30 ஆகிய தேதிகளிலும் ஜூன் மாதத்தில் 2ஆம் தேதி ஆகிய நாட்களில் மனுக்களை தாக்கல் செய்யலாம்.
விடுமுறை கால நீதிமன்றங்கள் மே 6, 13, 20, 27 ஆகிய தேதிகளிலும் ஜூன் மாதம் 3ஆம் தேதி ஆகிய நாட்கள் நடைபெறும்.
முதல் கால கட்டத்தில் இயங்கும் விடுமுறை கால நீதிமன்றங்களில் நீதிபதிகள் ஜி.ராஜசூர்யா, டி.சுதந்திரம், எம்.சத்தியநாராயணன் ஆகியோர் வழக்குகளை மே 1ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை விசாரிப்பார்கள். நீதிபதிகள் ராஜசூர்யாவும், சத்தியநாராயணனும் முதலில் அமர்வில் அமர்ந்து விசாரிப்பார்கள். பின்னர் தனித்தனியாக நீதிமன்றத்தில் அமர்ந்து வழக்குகளை விசாரிப்பார்கள்.
மே 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி முடிய உள்ள 2-வது கால கட்டத்தில் இயங்கும் விடுமுறை கால நீதிமன்றங்களில் நீதிபதிகள் கே.வெங்கட்ராமன், எம்.வேணுகோபால், எம்.சத்தியநாராயணன் ஆகியோர் வழக்குகளை விசாரிப்பார்கள். நீதிபதிகள் கே.வெங்கட்ராமன், எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முதல் அமர்வில் அமர்ந்து வழக்குகளை விசாரிப்பார்கள். பின்னர் தனித்தனியாக நீதிமன்றங்களில் அமர்ந்து வழக்குகளை விசாரிப்பார்கள்.
ஜூன் 2ஆம் தேதி முதல் 8ஆம் தேதி முடிய உள்ள 3-வது கால கட்டத்தில் நடைபெறும் கோடை விடுமுறை நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.சி.ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன், ஜி.ராஜசூர்யா, எஸ்.நாகமுத்து ஆகியோர் வழக்குகளை விசாரிப்பார்கள். நீதிபதிகள் ஏ.சி.ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன், எஸ்.நாகமுத்து ஆகியோர் முதல் அமர்வில் அமர்ந்து வழக்குகளை விசாரிப்பார்கள். பின்னர் தனித்தனியாக நீதிமன்றங்களில் அமர்ந்து வழக்குகளை விசாரிப்பார்கள்.
இந்த குறிப்பிட்ட நாட்கள் தவிர, வழக்குகள் அதிகமாக இருந்தால் தேவைப்பட்டால் நீதிபதிகள் கூடுதலாக நாட்களில் அவசர வழக்குகளை விசாரிப்பார்கள். கோடை விடுமுறை முடிந்த பிறகு, ஜூன் 9ஆம் முதல் வழக்கப்படி உயர் நீதிமன்றத்தில் உள்ள எல்லா நீதிமன்றங்களும் இயங்கும் என்று உயர் நிதிமன்ற பதிவாளர் ஆர்.மாலா தெரிவித்துள்ளார்.