Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை-தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில்கள்: இ‌ன்று மு‌ன்ப‌திவு!

சென்னை-தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில்கள்: இ‌ன்று மு‌ன்ப‌திவு!
, புதன், 30 ஏப்ரல் 2008 (10:51 IST)
கோடைகாலத்தில், ரெயில்களில் பயணிகளின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த சென்னை-தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்றதொடங்குகிறது.

இது கு‌றி‌த்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு இன்றமுதல் மே மாதம் 18ஆ‌ம் தேதி வரை ஞாயிறு மற்றும் புதன் கிழமைகளில் (ஏப்ரல் 30, மே 4, 7, 11, 14, 18) சிறப்பு ரெயில் (வ.எண். 0615) இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 8.20 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரெயில் மறுநாள் காலை 9.30 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும்.

மறுமார்க்கத்தில், தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு நாளை முதல் மே மாதம் 19ஆ‌ம் தேதி வரை திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் (மே 1, 5, 8, 12, 15, 19) சிறப்பு ரெயில் (0616) இயக்கப்படுகிறது. தூத்துக்குடியில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை வந்தடையும்.

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு மே மாதம் 2, 9, 16 ஆகிய தேதிகளில் சிறப்பு ரெயில் (0685) இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரெயில் மறுநாள் அதிகாலை 4 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும்.

மறுமார்க்கத்தில், தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு மே 3, 10, 17 ஆகிய தேதிகளில் சிறப்பு ரெயில் (0686) இயக்கப்படுகிறது. தூத்துக்குடியில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 10.15 மணிக்கு சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை வந்தடையும்.

இந்த சிறப்பு ரெயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி, மீளவிட்டான் மற்றும் மேலூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

தூத்துக்குடியில் இருந்து சென்னை வரும் சிறப்பு ரெயில் (0616) கூடுதலாக சென்னை மாம்பலம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்குகிறது எ‌ன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil