சென்னையில் இருந்து வங்கக்கடலில் 600 கி.மீ. தூரத்தில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை இன்று ஆந்திராவை நோக்கி நகர்ந்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தாழ்வு ஆந்திரா நோக்கி நகர்ந்துள்ளது. அதன் காரணமாக ஆந்திராவின் தெற்கு கடலோரப் பகுதி மற்றும் ராயலசீமா பகுதியிலும் அடுத்த 48 மணி நேரத்தில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அபாய எண் 3 அறிவிப்பு ஆந்திராவில் உள்ள துறைமுகங்களான மசூலிப்பட்டினம், விசாகப்பட்டினம், நிஜாம்பட்டினம் போன்ற இடங்களில் ஏற்றப்பட்டுள்ளது. பீமனிபட்டினம், காக்கிநாடாவும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.