அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் பா.ஜ.க. சார்பில் மே 2ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் இல.கணேசன் அறிவித்துள்ளார்.
மதுரையில் இன்று தமிழக மாநில பா.ஜ.க தலைவர் இல.கணேசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறி விட்டது.
மத்திய அரசின் இந்த மக்கள் விரோத போக்கை கண்டித்து ரதயாத்திரை மேற்கொண்டு வரும் எச்.ராஜாவின் ரத யாத்திரை நாளை காரைக்குடியில் முடிகிறது. அங்கு நாளை நடக்கும் பொதுக் கூட்டத்தில் அகில இந்திய பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் பேசிகிறார்.
ராமநாதபுரத்தில் முத்துராமலிங்கத் தேவருக்கு நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டும். திருநாவுக்கரசர் மேற்கொண்டுள்ள ரத யாத்திரை ராமநாதபுரத்தில் மே 12ஆம் தேதி முடிவடைகிறது. அன்று நடக்கும் பொதுக் கூட்டத்தில் மூத்த பா.ஜ.க தலைவர் வெங்கையா நாயுடு கொள்கிறார். சென்னையில் மே 2ஆம் தேதி முடியும் இந்த ரதயாத்திரையில் முன்னாள் மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி கலந்து கொள்கிறார் என்று இல.கணேசன் கூறினார்.