Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மதுரையில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா: முத‌ல்வ‌ர் அடிக்கல்!

மதுரையில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா: முத‌ல்வ‌ர் அடிக்கல்!
, ஞாயிறு, 27 ஏப்ரல் 2008 (10:56 IST)
மதுரையில் இர‌ண்டு இடங்களில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்க முதலமைச்சர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாடு அரசு மற்றும் எல்காட் நிறுவனம் சார்பில் மதுரை இலந்தைகுளத்தில் 29 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு தகவல் தொழில் நுட்ப பூங்காவும், வடபழஞ்சியில் 230 ஏக்கர் நிலப்பரப்பில் மற்றொரு தகவல் தொழில் நுட்ப பூங்காவும் அமைய இருக்கிறது.

இதேபோல் மதுரை விமான நிலையம் சர்வதேச விமானங்கள் வந்து செல்லும் வகையில் 610 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.150 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்காக 12 ஆயிரத்து 500 அடி நீளத்திற்கு ஓடுதளம் அமைக்கப்படுகிறது.

அத்துடன் நவீன வசதிகள் கொண்ட உலக தரத்திற்கு இணையாக ஒருங்கிணைந்த முனைய கட்டிடம் (டெர்மினல் கட்டிடம்) கட்டப்படுகிறது. சுமார் 17 ஆ‌யிர‌த்து 560 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த டெர்மினல் கட்டிடம் அமைகிறது.

இந்த திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா மதுரை விமான நிலைய வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவில் முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு புதிய விமான நிலைய டெர்மினல் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். இதேபோல் தகவல் தொழில் நுட்ப பூங்காங்களுக்கான அடிக்கல்லையும் முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்து பேசினார்.

விழாவுக்கு மத்திய அமை‌ச்ச‌ர்க‌ள் பிரபுல் பட்டேல், டி.ஆர்.பாலு ம‌‌ற்று‌ம் தமிழக அமைச்சர்கள், நாடாளும‌ன்ற, ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் கலந்துகொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil