Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக ஜெயலலிதா வ‌லியுறு‌த்த‌ல்!

பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக ஜெயலலிதா வ‌லியுறு‌த்த‌ல்!
, வெள்ளி, 25 ஏப்ரல் 2008 (11:18 IST)
மத்திய அமை‌ச்ச‌ர் டி.ஆ‌ர்.பாலு அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டார் என்பதற்கும், அதற்கு பிரதமர் துணைபோனார் என்பதற்கும் ஆதாரம் உள்ளது. எனவே பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று ஜெயலலிதா வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இது தொடர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அமை‌ச்ச‌ர் டி.ஆர்.பாலுவின் மகன்கள் நடத்தி வரும் கிங்ஸ் இந்தியா பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கும், கிங்ஸ் இந்திய கெமிக்கல் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கும், டி.ஆர்.பாலுவின் தலையீட்டின் பேரில், கியாஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா (கெயில்) நிறுவனம் குறைந்த கட்டணத்திற்கு கியாஸ் வழங்கியுள்ளது. இதனால் மத்திய அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

இந்த பிரச்சினையை அ.இ.அ.தி.மு.க. மா‌நில‌ங்களவை உறு‌ப்‌பின‌ர் மைத்ரேயன் மா‌நில‌ங்களவை‌யி‌ல் எழுப்பிய போது தி.மு.க. உறுப்பினர்கள் பலமுறை குறுக்கிட்டு அவரை பேச விடாமல் செய்துள்ளனர். நலிவடைந்த அனைத்து நிறுவனங்களுக்கும் இது போன்ற சலுகைகளையும், உதவிகளையும் மத்திய அரசு வழங்குமா?

தற்போது தொலைக்காட்சியில் கிங்ஸ் நிறுவனத்திற்கு கியாஸ் வழங்குமாறு, பிரதமர் அலுவலகத்தில் இருந்து 8 முறை கடிதம் சென்றதாக செய்திகள் வருகின்றன. கடைசியாக பிப்ரவரி 4ஆ‌ம் தேதி ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மத்திய அமை‌ச்ச‌ர் டி.ஆ‌ர்.பாலு அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டார் என்பதற்கும், அதற்கு பிரதமர் துணைபோனார் என்பதற்கும் ஆதாரம் உள்ளது. ஆட்சி அதிகாரத்துக்காக, தேசநலனை பறக்கவிடும் ஒருவர் உலகின் மிகப்பெரிய ஜனநாய நாடான இந்தியாவின் பிரதமராக இருக்கும் தகுதியற்றவர் ஆகிறார். எனவே டி.ஆர்.பாலுவை மத்திய அமை‌ச்ச‌ர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். அவருக்கு உடந்தையாக இருந்த பிரதமர் மன்மோகன் சிங் அந்த பதவியில் இருந்து விலக வேண்டும் எ‌ன்று ஜெயல‌லிதா வ‌லியுறு‌த்‌தி உ‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil