பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் இன்று போராட்டம் நடத்திய தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தைச் சேர்ந்த 150 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் இணைப்பு சங்கமான அரசு பொது சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறை ஒப்பந்தப் பணியாளர் சங்கத்தின் சார்பில் தொடர் மறியல் போராட்டம் சென்னையில் இன்று துவங்கியது. இந்த போராட்டம் ஏப்ரல் 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
ஒப்பந்தப் பணியாளர்களின் நான்காண்டுகால பணி அனுபவத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு நிரந்தரம் செய்யக்கோரியும், பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் பணி நியமனம் வழங்கிடக் கோரியும் இன்று தொடர் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.
சென்னை மெமோரியல் அரங்கம் முன்பு இன்று நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் பரமசிவம், முன்னாள் பொதுச் செயலாளர் பாலுச்சாமி, தலைமை நிலைய செயலாளர் ராமச்சந்திரன், மாநில பொருளாளர் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்று பேசினர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்ட 150 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.