''கல்வி அறிவை வளர்க்க தூண்டுகோலாக அமையப் பெறும் புத்தகத் தினத்தை கொண்டாடும் இந்த நன்னாலில் படைப்போர், படிப்போர், பதிப்பாளர் அனைவருக்கும் எனது வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'உலக புத்தகத் தினம்' இன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. புகழ் பெற்ற எழுத்தறிஞர் ஷேக்ஸ்பியர் பிறந்ததும், மறைந்ததுமான இந்நாளை யுனெஸ்கோ அமைப்பு ஆண்டுதோறும் இவ்வாறு கொண்டாடி வருகிறது.
''ஒரு நாட்டின் வளர்ச்சி மக்களின் கல்வியறிவைப் பொறுத்தே அமையும் என்பது நிச்சயம்'' என்பதுதான் பெருந்தலைவர் காமராஜரின் கொள்கையாகும்.
அக்கல்வியறிவை வளர்க்க தூண்டுகோளாக அமையப் பெறுவது உலகத் புத்தகத்தினம். எனவே இந்த நன்னாளில் படைப்போர், படிப்போர், பதிப்பாளர் அனைவருக்கும் எனது வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.