தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் அ.இ.அ.தி.மு.க. வினரின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள கேள்வி- பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கேள்வி: தமிழக உயர் அதிகாரிகளின் தொலைபேசி உரையாடல்களை புலனாய்வுத்துறை போலீசார் ஒட்டுக் கேட்டதாகக் கூறி, ஒரு ஆங்கில நாளேடு வெளியிட்ட செய்தியைத் தொடர்ந்து பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்த அ.இ.அ.தி.மு.க.வினர் ஒரு சி.டி. கேசட்டைத் தூக்கிக் காட்டி பயமுறுத்திய காட்சி புகைப்படமாக வெளிவந்திருக்கிறதே?
பதில்: அவர்களின் அந்த மிரட்டலுக்கெல்லாம் யார் பயப்படுவார்கள்? அவர்கள் சி.டி. கேசட்டைக் காட்டுவது இருக்கட்டும். அ.தி.மு.க. ஆட்சியிலே நடைபெற்ற ஊழல்கள், முறைகேடுகள் குறித்து அவர்கள் கையெழுத்தோடு கூடிய கோப்புகளையெல்லாம் தூக்கிக் காட்டினால் இவர்கள் எங்கே போய் ஒளிந்து கொள்வார்கள்?
இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.