மாகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டுப் பள்ளி விடுமுறை ஆதலால் காஞ்சிபுரம் மறைமலை நகர் அருகில் ஏரியில் குளிக்கச் சென்ற மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கி பலியாயினர்.
மறைமலை நகர் அருகில் உள்ள திருக்கச்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கோபிநாத், டில்லிபாபு. சிங்கப்பெருமாள் கோவில் அரசுப் பள்ளியில் 7ஆம் வகுப்புப் படிக்கும் மாணவர் லோகேஷ்.
மாகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று பள்ளி விடுமுறை ஆதலால் இவர்கள் மூவரும் அருகில் உள்ள மறைமலை நகர் ஏரியில் குளிக்கச் சென்றுள்ளனர். அதன்பின்னர் இவர்கள் வீடு திரும்பவில்லை.
மாணவர்களைக் காணாமல் அவர்களின் பெற்றோர் தேடிக் கொண்டிருந்த வேளையில், இன்று காலை செட்டி புண்ணியம்பதியில் ஏரிக் கரையில் ஈடு மேய்த்துக் கொண்டிருந்தவர்களின் கண்களில், ஏரியில் ஒதுங்கிக் கிடந்த மாணவர்களின் உடல்கள் சிக்கியது.
இதையடுத்துத் தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்ற திருக்கச்சூர் காவலர்கள், பலியான மாணவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.