திரைப்பட நடிகை தேனி குஞ்சரம்மாள் மறைவுக்கு அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "திரைப்பட நடிகையும், நாட்டுப்புறப் பாடகியுமான திருமதி தேனி குஞ்சரம்மாள் அவர்கள் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா, நாட்டாமை உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள, கழகத்தைச் சேர்ந்த நடிகை குஞ்சரம்மாள் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று கூறியுள்ளார்.