தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு மத்திய அரசால் ரூ.190 கோடி அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் 2008-09ஆம் ஆண்டுக்கான தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 10 மாவட்டங்களுக்கு அதற்கான பணிகளை மேற்கொள்வதற்காக முதல் கட்ட தவணையாக ரூ.190 கோடியே 20 லட்சம் அனுமதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. தற்போது முதல்கட்ட தவணையாக நிதியுதவி அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்துக்கு ரூ.20 கோடி, நாகப்பட்டினம் ரூ.22 கோடி, சிவகங்கை ரூ.25 கோடி, கடலூர் ரூ.30 கோடி, திருவண்ணாமலை ரூ.19 கோடி, விழுப்புரம் ரூ.53 கோடி, கரூர் ரூ.1.61 கோடி, தஞ்சாவூர் ரூ.9.28 கோடி, திருவாரூர் ரூ.2.61 கோடி, திருநெல்வேலி ரூ.6.14 கோடி அளிக்கப்பட்டு உள்ளது.
இதுதவிர இத்திட்டத்தின் பகுதி 3-ன் கீழ் 20 மாவட்டங்களுக்கு ரூ.56 கோடியே 27 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் ரூ.3.79 கோடி, திருவள்ளூர் ரூ.3.30 கோடி, வேலூர் ரூ.4.91 கோடி, சேலம் ரூ.2.44 கோடி, நாமக்கல் ரூ.2 கோடி, தர்மபுரி ரூ.1.87 கோடி, கிருஷ்ணகிரி ரூ.2.17 கோடி, ஈரோடு ரூ.3.31 கோடி, கோயம்புத்தூர் ரூ.3.60 கோடி, நீலகிரி ரூ.5 கோடி, திருச்சி ரூ.2.23 கோடி, பெரம்பலூர் ரூ.2.17 கோடி, புதுக்கோட்டை ரூ.2.92 கோடி, மதுரை ரூ.2 கோடி, தேனி ரூ.1.38 கோடி, ராமநாதபுரம் ரூ.1.80 கோடி, விருதுநகர் ரூ.2.82 கோடி, தூத்துக்குடி ரூ.2.70 கோடி, கன்னியாகுமரி ரூ.2.64 கோடி, அரியலூர் ரூ.2.80கோடி அளிக்கப்பட்டு உள்ளது.