மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தராக டாக்டர் ஆர்.கற்பக குமாரவேலுவை நியமித்து ஆளுநர் பர்னாலா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த பதவியில் இவர் மூன்றாண்டு நீடிப்பார் என்று ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தொழில் நுட்ப கல்வித்துறை தலைவராகவும் பேராசிரியராகவும் பணியாற்றியவர் குமாரவேல் என்பது குறிப்பிடத்தக்கது.