தமிழக முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை செய்யப்பட்ட வழக்கில் இருந்து தொழிலதிபர் எஸ்.ஏ.ராஜா உள்பட 6 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா, ஆசிரியர் பொன்ராஜ் ஆகியோர் கொலை வழக்கு நெல்லை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்தது. இதில் வேல்துரை, பாலமுருகன், அழகர் ஆகியோர் மட்டுமே குற்றவாளிகள் என்று நீதிபதி அறிவித்தார்.
எஸ்.ஏ.ராஜா, சிவலார்குளம் ஆறுமுகம், மருதப்பபுரம் பரமசிவம், வடமதுரை கண்ணன், மூணாறு அர்ச்சுனன், தூத்துக்குடி தனசிங் ஆகியோர் மீது குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி நீதிபதி அவர்களை விடுதலை செய்தார்.
குற்றம் நிரூபிக்கப்பட்ட வேல்துரைக்கு கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றும், ஆயுதம் வைத்திருந்ததாக மட்டும் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே வேல்துரைக்கு அனுமதி இன்றி ஆயுதம் வைத்திருந்ததற்கு தண்டனை அறிவிக்கப்படலாம்.
கொலை சதியில் நேரடியாக ஈடுபட்ட பாலமுருகன், அழகர் ஆகியோர் நாளை தண்டனை அறிவிக்கப்படுகிறது.