தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தென்னக ரயில்வே பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான ரயில்வே தொழிலாளர்களும் அவர்களின் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு ரயில்வே யூனியன் செயலரும், மத்திய அரசு கூட்டமைப்பின் அகில இந்தியத் தலைவர்களில் ஒருவருமான என்.கண்ணையா தலைமை தாங்கினார்.
அவர் பேசுகையில், "ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரையில் தொழிலாளர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு 2.5 விழுக்காடாக அறிவிக்கப்பட்டுள்ளது ஏற்கத்தக்கதல்ல. இதை மீண்டும் பழையபடி 5 விழுக்காடாக அதிகரிக்க வேண்டும்." என்றார்.