Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

32 பேரு‌க்கு ரூ.3.20 லட்சம் ‌நி‌தியுத‌வி : கருணா‌நி‌தி வழ‌ங்‌கினா‌‌ர்!

32 பேரு‌க்கு ரூ.3.20 லட்சம் ‌நி‌தியுத‌வி :  கருணா‌நி‌தி வழ‌ங்‌கினா‌‌ர்!
, சனி, 12 ஏப்ரல் 2008 (11:42 IST)
தனது அற‌க்க‌ட்டளை‌யி‌ல் இரு‌ந்து 32 பேரு‌க்கு க‌‌ல்வ‌ி, மரு‌த்துவ செலவு‌க்காக ரூ.3.20 ல‌ட்ச‌‌ம் ‌நி‌தியுத‌வியை முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி வழ‌ங்‌கியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக, முதலமைச்சர் கருணாநிதி தனது சொந்த பொறுப்பில் அளித்த 5 கோடி ரூபாயினை வங்கியில் வைப்பு நிதியாக போட்டு அதில் கிடைக்கப் பெறும் வட்டித் தொகையினை கொண்டு, மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோருக்கு உதவித் தொகை 2005 நவம்பர் மாதம் முதல் 2007 ஜனவரி மாதம் வரை வழங்கப்பட்டு வருகிறது.

வைப்பு நிதியாக போடப்பட்ட ஐந்து கோடி ரூபாயில், 30வது புத்தக கண்காட்சியினை 10-1-2007 அன்று திறந்து வைத்து முதலமைச்சர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் - பதிப்பாளர் சங்கத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கினார். மீதமுள்ள 4 கோடி ரூபாயி லிருந்து வரும் வட்டித் தொகையில் 2007 பிப்ரவரி முதல் தொடர்ந்து உதவித் தொகை வழங்கப்படுகிறது.

2005 நவம்பர் முதல் இது வரை வழங்கிய நிதி 79 லட்சத்து 85 ஆயிரம். மேலும் 2008, மார்ச் மாதம் வட்டியாக கிடைத்த தொகையில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக 32 பேருக்கு மொத்தம் ரூ. 3 லட்சத்து 20 ஆயிரம் நே‌ற்று (11ஆ‌ம் தேதி) வழங்கினார். நிதி பெறுவோர் அய‌ல் மாவட்டங்களிலிருந்து வந்து போகிற செலவினத்தை தவிர்ப்பதற்காக வரைவுக் காசோலை மூலம் அனுப்பப் பட்டுள்ளது எ‌ன்று கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil