Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஈரோடு அருகே பயணிகள் கூட்டத்தில் லாரி புகுந்தது இருவர் பலி!

வேலு‌ச்சா‌மி

Advertiesment
ஈரோடு அருகே பயணிகள் கூட்டத்தில் லாரி புகுந்தது இருவர் பலி!
, வெள்ளி, 11 ஏப்ரல் 2008 (17:19 IST)
ஈரோடு அருகே பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் கூட்டத்தில் லாரி புகுந்ததில் இருவர் பலியானார்கள்.

ஈரோடு அருகே உள்ளது கோபிசெட்டிபாளையம். இதன் அருகே உள்ளது கொளப்பலூர். இங்குள்ள தனியார் நூற்பாலைக்கு செல்ல இப்பகுதி மக்கள் பேருந்திற்காக காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக தர்மபுரியில் இருந்து கோவை செல்ல வந்த லாரி ஒன்று திடீரென நிலை தடுமாறி பயணிகள் கூட்டத்தில் புகுந்தது.

இதனால் பயணிகள் பதறியடித்தபடி ஓடினர். இத‌ி‌ல் ராமாயாள் (60), கருமாண்டகவுண்டர் (55) ஆகியோர்மீது லாரி சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே இறந்தனர். திருமூர்த்தி (45) படுகாயமடைந்தார். இவரை கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து சிறுவலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil