Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

த‌மிழ‌‌ர்க‌ளி‌‌ன் கனவு ‌‌நிறைவே‌றி இரு‌ப்ப‌தி‌ல் ம‌ட்ட‌ற்ற ம‌கி‌ழ்‌ச்‌சி: அர்ஜூன்சிங்குக்கு கருணாநிதி கடிதம்!

த‌மிழ‌‌ர்க‌ளி‌‌ன் கனவு ‌‌நிறைவே‌றி இரு‌ப்ப‌தி‌ல் ம‌ட்ட‌ற்ற ம‌கி‌ழ்‌ச்‌சி: அர்ஜூன்சிங்குக்கு கருணாநிதி கடிதம்!
, வெள்ளி, 11 ஏப்ரல் 2008 (16:38 IST)
உய‌ர் க‌ல்‌வி ‌நிறுவன‌ங்க‌ளி‌ல் ‌பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட்டோரு‌க்கு 27 ‌விழு‌க்காடு இட ஒது‌க்‌கீடு பெ‌ற்ற‌தன் மூல‌ம் த‌மிழக ம‌க்க‌ளி‌ன் கனவு ‌நிறைவே‌றி இரு‌ப்ப‌தி‌ல் ம‌ட்ட‌ற்ற ம‌கி‌ழ்‌ச்‌சி அடை‌கிறே‌ன் எ‌ன்று முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி ம‌த்‌திய அமை‌ச்ச‌‌ர் அ‌ர்ஜூ‌ன்‌ ச‌ி‌ங்கு‌க்கு கடித‌ம் எழு‌‌தியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக மத்திய அமை‌ச்ச‌ர் அர்‌ஜூன்சிங்குக்கு முதலமைச்சர் கருணாநிதி இ‌ன்று எழு‌‌தியு‌ள்ள கடித‌த்த‌ி‌ல், சோனியாகாந்தி வழி காட்டுதலின் பேரில் மன்மோகன்சிங் தலைமையில் நடந்து வரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உயர் கல்வி நிறுவனங்களில் பிற் படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 ‌விழு‌க்காடு இட ஒதுக்கீடு கொண்டு வந்த போது சமூக நீதிக்காக பாடுபடும் தலைவர்களும், சமுதாயத் திலும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ளவர்களும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

தற்போது 27 ‌விழு‌க்காடு இட ஒதுக்கீடு சட்டம் செல்லும் என்று உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் தீர்ப்பு அளித்துள்ளதால் அந்த மகிழ்ச்சி இரட்டிப்பாகி உள் ளது. இது உண்மையிலே பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான நாளாகும்.

18 ஆண்டுக்கு முன்பு வி.பி.சிங் தலைமையிலான மத்திய அரசு முதலில் இட ஒதுக்கீடு நடவடிக்கையை எடுத்தது. தற்போது 2-வது முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு உரிமையை பெற நாம் நூற்றாண்டுகளாக போராடி வந்தோம். தற்போது கிடைத்துள்ள வெற்றி மறக்க முடியாத வரலாற்று சாதனையாகும்.

கிரீமிலேயர் பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே நீங்கள் தெளிவான முடிவு எடுத்துள்ளீர்கள். எனவே கிரீமிலேயர் பிரச்சினையையும் நீங்கள் வெற்றிகரமாக தீர்த்து வைப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.

உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு வந்து வலியுறுத்திய ஒரே மாநிலம் தமிழ்நாடுதான் என்பதை உங்களுக்கு நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். இதற்காக தமிழக சட்ட‌ப்பேரவை‌யி‌‌‌ல் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.

தமிழக மக்களின் கனவு நிறைவேறி இருப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். 27 ‌விழு‌க்காடு இட ஒதுக்கீட்டை பெற நீங்கள் எடுத்த முயற்சிகள், உறுதியான நடவடிக்கைகளுக்காக நான் மனதார நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil