தமிழகத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 20 விழுக்காடு வீதம் அதிகரித்து வருவதாக சுற்றுலா அமைச்சர் சுரேஷ் ராஜன் தெரிவித்தார்.
சட்டப் பேரவையின் இன்று கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அமைச்சர் சுரேஷ் ராஜன், “தமிழகத்திற்குக் கடந்த ஆண்டு உள்நாட்டு சுற்றுலா பயணிகள் 5 கோடி பேரும், அயல்நாட்டுச் சுற்றுலா பயணிகள் 15 லட்சம் பேரும் வருகை தந்தனர். ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா பயணிகளின் வருகை 20 விழுக்காடு அதிகரித்து வருகிறது.
சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்த பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை சுற்றுலா துறை ஏற்படுத்தி தரும்” என்றார். என்று அமைச்சர் சுரேஷ்ராஜன் தெரிவித்தார்.